பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

35 வேட்பாளர்களையும் மாற்றவேண்டும்; இல்லையெனில் திமுக 4வது இடத்துக்கு தள்ளப்படும்: மு.க.அழகிரி

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 35 வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், திமுக இந்தத் தேர்தலில் 4வது இடத்துக்குத் தள்ளப்படும் என்று
மு.க.அழகிரி எச்சரித்துள்ளார்.
திமுக வேட்பாளர்கள் தேர்வு, இந்த முறை காசு வாங்கிக் கொண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நன்றாகத் தெரிகிறது. கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களுக்கு இடமில்லை. யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் காசு கொடுத்துவிட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, 35 வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும். 
வேலூரில் கேவிகுப்பம் என்ற இடத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது உள்ளே வரக்கூடாது என்று சிலர் குரல் கொடுத்தனர். அவர்கள் துரை.முருகன் ஆதரவாளர்கள் தான். தங்களுக்கு கட்சி வாய்ப்பளிக்கவில்லை, கூட்டணிக்கு வாய்ப்பளித்துள்ளனர் என்று அவர்கள் கோஷம்  இட்டுள்ளனர். என் மீது நடவடிக்கை எடுத்ததுபோல், இப்போது, துரை முருகன் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்குமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.