பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2014

ராஜீவ் சிலை உடைப்பு: நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பஜாரில் உள்ள ராஜீவ்காந்தி சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் நேற்று அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் நேற்று பாப்பான்குளத்தில் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நாம்தமிழர் கட்சி நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி ஆறுமுகம் (32), துணை செயலாளர் ஆலங்குளம் பரணி ராஜபாண்டியன் (26), குறும்பலாபேரி கிளை செயலாளர் சிங்கதுரை (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.