பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

இன்று மாலை வெளியீடு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில்
போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று அறிய மக்களைப்போலவே பிற கட்சிகளும் ஆவலோடு காத்திருகிறது.


இந்நிலையில் இன்று மாலை வெளியாகும் 3வது வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தின் 20 தொகுதிகள் வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாலம் என கூறப்படுகிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியாகும் என தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.