பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014


சேலம் யாருக்கு? விஜயகாந்த்- ராமதாஸ் பிடிவாதம்
 தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.கே.மணி, சேலம் தொகுதி
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள் ஆகியோரும் பங்கேற்றனர்.


அன்புமணியை அறிமுகப்படுத்திய ராமதாஸ் தொடர்ந்து சேலம் தொகுதி வேட்பாளர் அருள் என அழைத்தார். அவர் எழுந்து நின்றவுடன், ‘’நீங்கள் இவ்வளவு காலமாக உழைத்தது வீண் போகாது. எதைப்பற்றியும் நினைக்காமல் செய்கின்ற வேலையை தொடர்ந்து செய்யுங்கள். எவ்வித தயக்கமும் வேண்டாம்,’’ என்றார்.
சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அக்கட்சி வேட்பாளராக சுதீஷ் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் சுதீஷ் பங்கேற்றார். இந்நிலையில் விஜயகாந்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸ் பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் யார் என்பதை விஜயகாந்த் அறிவிக்கவில்லை. வழக்கம் போல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். இந்த தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை இரண்டு நாள் கழித்து அறிவிக்கிறேன் எனக்கூறி பிரசாரத்தை முடித்தார்.