பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
 உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான
மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர்  இன்று ஆரம்பமாகின்றது.
 
திக்கம் முனை விளையாட்டுகழக மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சுற்று போட்டியில் யாழ். மாவட்டத்தில் உள்ள  முன்னணி விளையாட்டு கழகங்கள் உட்பட 52 விளையாட்டு கழக அணிகள் பங்கேற்கின்றன.
 
இதேவேளை இந்தச் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டும் அணிக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் என்பன வழங்கப்படவுள்ளன.