பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என இந்தியா அறிவிப்பு

எல். ரி. ரி. ஈ.யின் படுகொலைகளை விசாரிப்பதற்கு பிரேரணை இடமளிக்கவில்லை பாகிஸ்தான் கண்டனம்

ஜெனீவாவில் அமெரி க்கா முன்மொழிந்துள்ள பிரேரணை இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டில் அடைந்த முன்னேற்றத்திற்கு தீங்கிழைப்பதாக அமைந்திருப்பதுடன் இதனால் ஆக்கபூர்வமான பயன் எதுவும் கிடைக்காது என்று இந்தியா அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின அனுசரணையுடன் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமது நாடு நடுநிலை வகிக்கும் என்று இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்தி தொடர்புடைய பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களை வரவேற்றிருக்கும் இந்தியா இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் மேலும் சிறப்பாக நடந்துகொள்ளல் அவசியம் என்ற கருத்தையும வலியுறுத்தியுள்ளது. 13ஆவது திருத்தப் பிரேரணையை முழுமையாக இலங்கை அரசு அமுலாக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அமெரிக்காவின் அனுசரணையுடனான இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்தப் பிரேரணையில் எல். ரி. ரி. ஈயினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் இந்தப் பிரேரணை வேண்டுமென்றே இலங்கை போன்ற நாடுகளை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டிருப்பது வருந்தத்தக்க செயலென்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரேரணைக்கு அனுசரணைய ளிக்கும் நாடுகளில் மனித உரிமை மீறல்கள் சரியான முறையில் பேணப்பட வில்லை என்பதையும் நாம் அவதானத்துக்கு எடுத்துக்கொள்வது அவசியம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் இந்த அமெரிக்க பிரேரணை அரசியல் உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரவில்லை எனத் தெரிவித்தது.