பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை – கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதஉரிமைகளுக்கு எதிரான மிகமோசமான மீறல்கள், துஷ்பிரயோகங்கள் குறித்து அனைத்துலக சுதந்திர விசாரணை அவசியமானது என்று இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான போல் டிவர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியும், லிபரல் கட்சியும் முழு ஆதரவு வழங்கியதால், இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையைக் கோரும் தீர்மான வரைவு மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், கனேடிய நாடாளுமன்றத் தீர்மானம் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.