பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2014

புதிய கட்சி தொடங்க நான் எம்.ஜி.ஆர். அல்ல: அழகிரி

ஆரணியில் உடல் நலக்குறைவாக உள்ள தனது ஆதரவாளர் முருகனின் தந்தை எம்.கே.ஏழுமலையை சந்திப்பதற்காக ஆரணி வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது
அவர் கூறுகையில், நான் இன்னும் திமுகவில் தான் இருக்கிறேன். எனக்கு இந்த கட்சியில் உரிமை இருக்கிறது. என் மீது நடவடிக்கை எடுக்க தூண்டிவிட்ட பினாமிகள் மற்றும் ஏஜெண்டுகள் மீது இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கைகள் பாயும் என்றார்.


மேலும் எம்.ஜி.ஆர். வைகோ போன்றவர்கள் தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பித்தார்களே? அதுபோல் நீங்களுகளும் செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய கட்சி தொடங்க நான் எம்.ஜி.ஆர். அல்ல என்று தெரிவித்தார்