பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

தொண்டமானை இ.தொ.கா தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதியா ?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை அந்த பதவியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவரது சகோதரியின் மகனான ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை தலைவராக்கும் சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் தொண்டமான் ஊவா மாகாண கைத்தொழில் மற்றும் கலாசார அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
செந்தில் தொண்டமானின் உண்மையான பெயர் முத்துநாயகம் செந்தில் என்பதாகும்.
சிறுவயது முதல் தமிழகத்தில் வாழ்ந்து வந்த முத்துநாயகம் செந்தில், ஆறுமுகன் தொண்டமானுக்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக்கும் நோக்கில் பெற்றோரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட முத்துநாயகம் செந்தில், முதலில் தனது பெயரை செந்தில் தொண்டமான் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கொடுக்கல் வாங்கல் சம்பவம் ஒன்று தொடர்பாக அமைச்சர் தொண்டமானுடன் முரண்பாடுகளை கொண்டுள்ள வர்த்தகர் ஒருவர், செந்தில் தொண்டமானை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.