பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

ராஜீவ் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே
முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

இத் தீர்ப்புக்கு பின் அவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசோ 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
இவ்வழக்கின் மீதான விசாரணையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி, தமிழக அரசின் வழக்கறிஞர் மற்றும் ஹரிஷ், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோர் வாதாடினார்கள். சிபிஐ-யால் கையாளப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை என மத்திய அரசு வழக்கறிஞரான வாகன்வதி வாதிட, தமிழக அரசின் வழக்கறிஞரோ உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி தமிழக அரசுக்கு குற்றவாளிகளை விடுவிக்க அதிகாரம் உள்ளது என வாதிட்டார். 
ஜெத்மலானியும் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.