பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து
அழகிரி தமிழ்நாடு முழுவதும் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

புதன்கிழமை இரவு தாயார் தயாளு அம்மாளை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 20 நிமிடங்கள் தாயாருடன் பேசி விட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு கனிமொழியை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். என்ன பேசினார்கள் என்பது வெளியாகவில்லை.
அழகிரி சென்றதும் அவர் வந்து விட்டு சென்றதையும் பேச்சு விவரங்களையும் கலைஞரிடம், கனிமொழி தெரிவித்தார்.