பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழக லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு
ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி மாநில செயலாளர் ஆர்.பன்னீர், மாவட்டத் தலைவர் சிவமணி மற்றும் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசுவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் தொகுதி முழுவதும் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்யவதாக தேர்தல் பொறுப்பாளரிடம் உறுதியளித்துள்ளனர்.