பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2014

இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. 


அதன்படி 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களது கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூர் சர்வதேச நிறுவனத்தினால் யாழ்.பொது நூலகத்தில் அமைக்கப்பட்டு வரும் இளையோர் பகுதிக்கு நடமாடும் சேவைக்காக பேரூந்து ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் சிங்கப்பூர் நூலக சபையினால் 10 ஆயிரம் நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பபடவுள்ளன. எனவே இதற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி 11மணிக்கு பொதுநூல கேட்போர் கூடத்தில் நடைபெறும் என பிரதம நூலகர் இமெல்டா அறிவித்துள்ளார்.