பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2014


 பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.


இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்தியா நடுநிலைமை வகித்தமை தமிழகத்தில் ஒருவித கொந்தளிப்பு நிலமை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு மத்திய அமைச்சர்,பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி,விடுதலை சிறுத்தைகள், போன்றன கட்சிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகித்ததற்கு இந்திய வெளியுறவுதுறை  செயலாளர் பின்வருமாறு கூறியுள்ளார்.

தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது.  இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மீனவர் களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்தப் படும் திகதி பற்றி ஆலோசித்து வருகிறோம். என குறிப்பிட்டுள்ளது.

இன்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை சிறைகளில் இருக்கும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.