பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2014

நீர்வள முகாமை கருத்தரங்கு நாளை
யாழ். மாவட்ட நீர்வளப் பேணுகையும் இரணைமடுக்குள குடிநீர் விநியோகத் திட்டமும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.


யாழ்.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அலுவலக கேட்போர் கூடத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை இடம்பெறவுள்ளது.

இக் கருத்தரங்கில் வளவாளர்களாக பேராசிரியர் ஆர்.நந்தகுமார், திட்ட இணைப்பாளர் மரியதாசன் குரூஸ் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

மேலும் வடமாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் அங்கத்தவர்கள், கல்வியாளர்கள்,ஆர்வமுள்ள பொதுமக்கள் எனப் பலுரும் பங்க பற்றி பயன்பெற முடியும் என இணையத்தின் தலைவர் சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.