பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமான சட்டவிரோத ஆயுத களஞ்சியமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராக வாஸ் குணவர்த்தன திகழ்கின்றார்.

வெலிவேரிய பிரதேசத்திலிருந்து இந்த ஆயுதக் களஞ்சியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ரி56 ரக துப்பாக்கிகள், இரண்டு ஆர்.பி.ஜீ. ரக துப்பாக்கிகள், குண்டுகள், கைத்துப்பாக்கிகள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
வாஸ் குணவர்த்தனவின் பிரத்தியேக செயலாளர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளின் பொது ஆயுத களஞ்சியம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நவீன ஆயுதங்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வழங்கிய பணத்தைப் பெற்றுக்கொண்டு முஸ்லிம் வர்த்தகரான சியாமை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.