பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

வெள்ளை வானில் இளைஞர் ஒருவர் கடத்தல்: புதுக்குடியிருப்பில் பதற்றம்
புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடையார்கட்டு தெற்கு, உடையார் கட்டு பகுதியில் வசித்து வரும் மயில்வாகனம் யசீகரன் (34) என்ற இளைஞனே இன்று மதியம் 12.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றில் வேலை செய்து வருவதுடன் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.