பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது: அழகிரி 'பஞ்ச்

எதிரிகளை மன்னித்து விடலாம்; ஆனால், துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று பஞ்ச் டயலாக்கைக் கூறினார் மு.க. அழகிரி.,

மதுரை தயா மகாலில் நடந்து வரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது ஆதரவாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, திமுகவைப் பாதுகாப்பதை விட, கலைஞரைப் பாதுகாப்பதே முக்கியம் என்று கூறினார். அப்போது, எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; ஆனால் துரோகிகளை மன்னிக்க முடியாது என்று பஞ்ச் டயலாக் வெளியிட்டார்.
இருதினங்களுக்கு  முன்னர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விட்டு வந்தது குறித்துப்  பேசிய அழகிரி, இந்த மாதிரி சூழ்நிலையில் என்னை சந்தித்ததே ஒரு பேறு என்று கூறிய அவர், ரஜினியைச் சந்தித்து வந்தது எனக்கு பெரும் மனநிம்மதி அளித்தது என்றார்.