பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

வலி. தெற்கில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தது உலக வங்கி குழு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுவினர் இன்று வலி தெற்கு பிரதேச செயலகத்தில் விசேட தேவையுடையோரை சந்தித்தது.


இன்று காலை 10.30 மணியளவில் உடுவில் பிரதேச சபை மண்டபத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

வலி தெற்கு பிரதேசத்தில் உலக வங்கியின் நிதியுதவி  பெறும் 50 மாற்றுத் திறனாளிகளை சந்தித்து கொடுப்பனவுகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இதேவேளை மாலை 3 மணிக்கு வலி வடக்கு பிரதேச சபையில்  மாற்றுதிறனாளிகள் மூவரைச் சந்தித்து அவர்களது கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் சமூக சேவை அமைச்சின் அதிகாரிகள், உலக வங்கியின் அதிகாரிகள் மற்றும்  யாழ். மாவட்ட செயலக சமூக அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.