பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2014

நாடு முன்னேற சர்வதேச விசாரணை :சாத்வீகப் போராட்டத்தில் கலந்து மன்னார்மாவட்ட ஆயர்
news
 நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று சாத்வீகப் போராட்டம் ஒன்று மன்னார் நகரில் முன்னெடுக்கப்பட்டது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு விருப்பமில்லை.அதே சமயத்தில் பிரச்சினைகளை தட்டிக்கேட்கும் துணிச்சலும் கிடையாது.இதனால் தான் இத்தனை பிரச்சனைகளும்.
 
போர்க்காலத்தில் நடைபெற்ற சர்வதேச போர் குற்றங்கள் என சொல்லப்பட்ட குறிப்பாக கொத்துக்குண்டுகள் இரசாயன குண்டுகளை கடைசிநேரத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.ஆனால் அவர்கள் கொன்றது சாதாரண மக்களையே. யுத்த சூனிய பிரதேசத்தில் யாரையும் சுடக்கூடாது ஆனால் சனல் 4 காணொளியில் காட்டியது எப்படி? 
அது மட்டுமல்ல அவர்கள் செய்து அனைத்து காரியங்களும் சர்வதேச சட்டங்களுக்கு மாறானதாகவும் போர் குற்றங்களாகவும் செய்து குவித்தார்கள்.
 
ஆகவே இப் போராட்டத்தின் மூலம் என்ன முடிவு வரும் என எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரும் சொல்கின்றார்கள் கொஞ்சம் நன்மை உள்ளது என.ஆனால் கொஞ்ச நன்மை எங்களுக்கு போதாது முழு நன்மையை பெறுவற்கும் வழி உள்ளது ஆகவே அந்த வழியை நாம் கடைப்பிடித்தால் இந்த நாடும் திருந்துவதற்கு வழி கிடைக்கும்.ஆகவேதான் சர்வதேச விசாரணை எமக்கு தேவை.
 
இவ்வாறாக நேற்று நடைபெற்ற சாத்வீகப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித்தார்.