பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2014

கடன் அட்டை மோசடி:தேடப்பட்ட இலங்கையர் கைது
கடன் அட்டை மோசடி தொடர்பாக இன்டர்போலினால் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்தவர் சென்னையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பாரிய கடனட்டை மோசடி தொடர்பில் இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேகநபரான இவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதேவேளை சென்னையில் வைத்து இவர்  கடந்த வாரமும் போலியான கடனட்டையை பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
தற்போது கைதான முக்கிய சந்தேக நபரை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்