பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

சுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை: பூவிருந்தவல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையத்தில் 1991ம் ஆண்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலைய
உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உயரிழந்தார். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை பூவிருந்தவல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வெடிகுண்டு வழக்கில் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த சுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளது பூவிருந்தவல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம். மேலும் சுந்தர் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.