பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014


குஸ்பு தி மு க இல் இருந்து விலகுகிறாரா  ?
தி.மு.க.வில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் பற்றி கேட்டதற்கு, ‘‘வதந்திகளுக்கு பதில் கொடுக்க நேரம் இல்லை’’ என்று நடிகை குஷ்பு கூறினார்.
தேர்தல் பிரசாரம்
நடிகை குஷ்பு, தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக
இருந்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார்.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் ஏப்ரல் 5–ந்தேதி தொடங்கி 22–ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக அவர் கூறினார். ஆனால், அவருடைய பிரசார சுற்றுப்பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க. தலைமை இதுவரை வெளியிடவில்லை.
விலகலா?
இந்த நிலையில், குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகப்போவதாக ஒரு வார பத்திரிகையில் தகவல் வெளியானது. ‘‘தி.மு.க.வில் இருந்து விலகப்போவதாகவும், பா.ஜ.க. அல்லது ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்காக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறதே?’’ என்ற கேள்விக்கு, ‘‘இதுபற்றி பேச எனக்கு நேரம் இல்லை’’ என்று குஷ்பு பதில் அளித்ததாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.
இதுபற்றி குஷ்புவிடம்,  நிருபர் கேட்டதற்கு குஷ்பு, ‘‘வதந்திகளுக்கு பதில் கொடுக்க எனக்கு நேரம் இல்லை’’ என்று மட்டும் பதில் அளித்தார்.