பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2014


சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள்

சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிசின் 17 முறை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை பெற்று சாதனை படைத்த நட்சத்திரம் ரோஜர் பெடரர்.
இவரது மனைவி மிர்கா கர்ப்பமுற்றதை ரோஜர் தனது டிவிட்டர் தளத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டார் .இந்நிலையில் வரும் யூலை மாதம் இவர்களுக்கு மீண்டும் இரட்டை குழந்தைகளே பிறக்கும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இதுகுறித்து தாங்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என ரோஜரும் அவரது மனைவியும் கூறியுள்ளனர்.ரோஜருக்கு கடந்த 2009ம் ஆண்டு மைலா மற்றும் சார்லினி என்ற இரண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடதக்கது.