பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2014

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா- செக் குடியரசின் காரா பிளாக் ஜோடி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 
மகளிர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சானியா-காரா பிளாக் ஜோடி, செக் குடியரசின் லூசி ஹரடெக்கா-

சீனாவின் ஜீ செங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் சானியா-காரா பிளாக் ஜோடி, 6-4, 3-6, 10-7 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது. 

மற்றொரு அரையிறுதியில் சு வெய் ஹிசியே-ஷூவாய் பெங் ஜோடி, குஸ்னெட்சோவா-ஸ்டோசர் ஜோடியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் ஜோடியுடன் சானியா-காரா பிளாக் ஜோடி இறுதிப்போட்டியில் மோத உள்ளது. 

ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரடொக் ஸ்டொபனிக் ஜோடி சுவிட்சர்லாந்தின் நட்சத்திர ஜோடியான ரோஜர் பெடரர், வாவ்ரிங்காவிடம் 3-6 7-6 4-10 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி தோல்வியடைந்து வெளியேறியது.