பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2014


hirunika_1

என்னைப்பற்றி மோசமான செய்திகள் இணையத்தளங்களில் வெளிவருகின்றன

என்னுடைய தந்தையின் கொலை வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிட்டுமேயானால் இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு
அதுவே சிறந்த முன்னுதாரணமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மேல் மாகாண சபையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
இதேவேளை, தன்னை பிரபல மாக்கியது ஊடகங்களே. அதனை நான் மறக்கமாட்டேன். இருப்பினும் தற்போது இணையத்தளங்களினூடாக என்னைப்பற்றி மிகவும் மோசமான முறையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இச் செய்திகள் முற்றிலும் தவறானது. இந் நாட்டின் கலாசாரம் மற்றும் ஒழுக்கவியல்களுக்கு அமைவாகவே பெற்றோர்கள் என்னை வளர்த்துள்ளனர்.
மேல் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ‘ஹிருணிகா உங்களின் குரல்” என்ற இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.