பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெற்றி பெறாது: சீமான்
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர்,   ‘’தமிழ் ஈழத்தில் தமிழ் இனத்தை
கொன்றது காங்கிரஸ் கட்சித்தான். இதற்கு துணை போனது தி.மு.க. தடுக்க வழி இருந்தும் வேடிக்கை பார்த்தது பாரதீய ஜனதா கட்சி.

ஊழலை ஒழிக்க நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று கூறுகிறார்கள். உண்மையான, தூய்மையான அரசியல் கட்சி மலர வேண்டும் என்றால் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க., தே.மு.திக. ஆகிய கட்சிகள தோற்கடிக்கப்பட வேண்டும். அ.தி.மு.கவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க. வேட்பா ளர்கள் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில் 14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெறாது.
ஈழத்தில் பொதுவாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா. கச்சத்தீவை கொடுத்தது , கொடுத்தது தான் என்கிறது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள். ஆனால் மீட்டே தீருவோம் என்கிறது அ.தி.மு.க. இதனால் வாக்காளர்கள் சிந்தித்து பார்த்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.