பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2014

சாலையின் குறுக்கே ஓடிய புலியால் நடந்த ஆட்டோ விபத்து;  இரு மாணவர்கள் பலிநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகன் முகமது பஷீர் (வயது-17), அதே பகுதியைச் சேர்ந்த அசைநாரின் மகன் முகமது சஃபீக் (வயது-17), முஜீபு (வயது-24) ஆகியோர் நேற்று
அதிகாலையில் பிதர்க்காடு பகுதியிலிருந்து நெலாக்கோட்டைக்கு ஆட்டோவில் சென்றனர். அந்த ஆட்டோவை முஜீபு ஓட்டினார்.


நெலாக்கோட்டை சென்றுவிட்டு திரும்பும் வழியில் “சசக்ஸ்” என்னுமிடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்த பொது, வனப்பகுதிக்குளிருந்து திடீரென ஆட்டோவுக்கு முன்பு புலி ஒன்று பாய்ந்தோடிச் சென்று சாலையைக் கடந்துள்ளது.

பக்கத்திலேயே புலியைக் கண்ட அச்சத்தில் முஜீபு பயந்துபோயுளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலயோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதில், முகமது பஷீர் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயங்களுடன் இருந்த முகமது சஃபீக், ஆட்டோ ஓட்டுநர் முஜீபு இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுபோய் சிகிச்சைக்கு சேர்த்தனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று முகமது சஃபீக் நேற்று மாலை உயிரிழந்தார். முஜீபுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்விபத்து குறித்து நெலாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது பஷீரும் முகமது சஃபீக்கும் அதே பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.