பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2014


சம்பந்தன், சோபித தேரர் மற்றும் அனுரகுமாரவிற்கு இடையில் இரகசிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி சோபித தேரர் மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நேற்று இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரியொருவரே சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
ஒரு மணித்தியாலயம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது