பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014

மாங்குளத்தில் லொறி விபத்து - 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயம் 
இராணுவ சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
 
கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியே மாங்குளம் – இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. 
 
குறித்த விபத்து இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
லொறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.