பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2014


அல்லைப்பிட்டிய்ல் 19 வயது இளைஞன்  தூங்கி தற்கொலை 
யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த ஐங்கரன் பிரதீபன் (வயது-19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (25) இரவு பெற்றோருடன் முரண்பட்ட பின்னர் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் பின்னர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் காண்பதாக இறந்தவரின் தந்தை பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இறந்தவர் மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறன்றனர். மேலும் இப்பகுதியில் அண்மைக்காலமாக தற்கொலை சம்பவங்கள் இடம்பெறுவதுடன் சட்டவிரோதமான மதுபான விற்பனையும் அதிகரித்துள்ளது. இறந்தவர் சகோதரியின் காதல் தொடர்பின் காரணமாக ஏற்கனவே பெற்றொருடன் முரண்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.