பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2014


வங்கிக் கொள்ளைகளுடன் ஜே.வி.பிக்கு தொடர்பு!- எஸ்.பி. திஸாநாயக்க சந்தேகம்
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் தொடர் வங்கி கொள்கைகளின் பின்னணியில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கலாம் என தான் எண்ணுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பி போன்றவை கட்சிகள் அல்ல, அவை வெறுமனே குழு அணிகள்.
அவர்கள் உணர்வுகளுக்கு அடிமையாகி சொர்கபுரிகளில் வாழும் நபர்கள்.
அவர்களுக்கு கொள்ளையடிப்பும், பயங்கரவாதமுமே பழக்கம்.
தற்போது வங்கிகள் கொள்ளையிடப்படும் சம்பவங்களைப் பார்க்கும் போது அதில் ஏதேனும் அரசியல் இருக்குமா என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
அதில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிஸக் கட்சியும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.