பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014

மிட்சல் ஜான்சனின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  மிட்சல் ஜான்சன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.


சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கிண்ணத்தில் கால் விரல் காயத்தால் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், டெஸ்டில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ள ஜான்சன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,

டெஸ்ட் போட்டியில் தான் விளையாட விரும்புகிறேன், இதற்காக டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன்.

2015 ல் நடக்க உள்ள(50ஓவர்) உலகக் கிண்ணத் தொடரைவிட இங்கிலாந்து மண்ணில் நடக்கவிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரைத்தான் என் இலக்காக கொண்டுள்ளேன்.

எனவே ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.