பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை: ஜெயலலிதா பேட்டி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார். 
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக, முறையாக நடைபெற தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
'வெற்றி எங்களுக்கு': வாக்களித்த பின்னர் மு.க.அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் தனது இல்லத்துக்கு அருகே உள்ள முத்துப்பட்டி அரசு பள்ளியில் காலை 10.30 மணிக்கு வாக்களித்தார். அவரது குடும்பத்தினரும் அவருடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர், 'வெற்றி எங்களுக்கு' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். 
ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
கலைஞர் வாக்களித்தார்
திமுக தலைவர் கலைஞர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் சென்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.