பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது. 


தமிகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 14.31 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கரூரில் 18 சதவிகிதமும், குறைந்தபட்சமாக அரக்கோணத்தில் 8 சதவிகிதமாகவும் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருச்சி 16, தஞ்சை 15, காஞ்சிபுரம் 12, நெல்லை 15, வேலூர் 12, நாகை 15, புதுவை 16, திருவண்ணாமலை 17, கோவை 15, பொள்ளாச்சி 16, கடலூர் 18, தென்காசி 16, சிவகங்கை 7, விருதுநகரில் 14.5 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.