பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2014


ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிலிருந்து விலகல்
மக்களவை தேர்தலில் தேசியக்கட்சியின் மூத்த தலைவர்களை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்
தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் முகுல் திரிபாதி நேற்று போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில் “எனக்கு எனது கட்சியிடமிருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் நான் போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று ஆம் ஆத்மி சார்பில் இட்டா தொகுதியில் போட்டியிடும் திலீப் யாதவ், ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் ரவீந்தர் சிங், அஜ்மீரில் போட்டியிடும் அஜய் சோமானி ஆகியோரும் இத்தேர்தலில் போட்டியிடும் முடிவை விலக்கி கொண்டுள்ளனர்.