பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2014

ஆலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார்.


இந்தநிலையில் அம்மாநிலத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மனோகரன் உட்பட 8 பேர், நாராயணசாமியை கண்டித்து ராஜினாமா செய்துள்ளனர். இதனை கட்சி தலைமைக்கு கடிதமாக அனுப்பியுள்ளனர்.

கட்சியினருடன் ஆலோசிக்காமல் வேட்பாளர் பெயரை அறிவித்தாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தனிமனித வளர்ச்சிக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.