பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2014

4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய ஐதராபாத்
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரு
ம் 7வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.
ஷிகர் தவான் 33 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து ஆரோன் பின்ச் 88 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 58 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதிகபட்சமாக குயின்டான் டிகாக் 48 ஓட்டங்களும், முரளி விஜய் 52 ஓட்டங்களும் எடுத்தனர். ஐதராபாத் சார்பில் டேல் ஸ்டெயின் 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஐதராபாத் அணியின் ஆரோன் பின்ச் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.