பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2014


ஆண் புடையனை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது!- மாத்தளையில் சம்பவம்
ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை, உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த மரண விசாரணையில், மேற்படி நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒரு சோடி புடையன் பாம்பை வேறுபடுத்தி தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்பை அடித்துக் கொன்றுள்ளார்.
அதனையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் பாம்பு குறித்த நபரை விரட்டி விரட்டிக் தீண்டியதாகவும், அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.