பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014

வெடி பொருட்களுடன் கைதானவர்களுக்கு நீதி மன்றில் பிணை 
மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் 52 டைனமைட் வெடி பொருட்களுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த
கடற்பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலின் போது  சந்தேகத்தின்பேரில் மூவரை சோதனையிட்டபோது வெடி பொருட்கள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
 
சந்தேகநபர்கள் மன்னாரில் வசித்து வருவதாகவும் கைது செய்யப்படும் போது இவர்களிடமிருந்து 52 டைனமைட்களும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 
 
சந்தேகநபர்களில் ஒருவரிடம் 17 டைனமைட்களும், மற்றவரிடம் 19  டைனமைட்களும் மூன்றாவது சந்தேகநபரிடம் 16 டைனமைட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்திய போது 5000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 2500 சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.