பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


பளையில் யாழ்தேவி மோதி கடவை காவலாளி பலி
பளை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தர்மகேணி ரயில் கடவையில் பணியாற்றும் பளைப் பிரதேசத்தை சேர்ந்த தங்கராசா சாந்தகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ரயில் கடவையின் அருகில் இவர் கதிரை மீது உறங்கிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.