பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


தமிழகத்தில் 72.83 % வாக்குகள் பதிவு : பிரவீண்குமார் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 

 தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 72. 83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.