பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


மே 6 -ல் பாடகி சின்மயி  திருமணம்- மலைசாதி மக்களுக்காக அறக்கட்டளை 
பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி,  நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்துகொள்கிறார்.  ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவேரி,’ ‘விண்மீன்கள்,’ ‘வணக்கம் சென்னை’ ஆகிய தமிழ் படங் களிலும், சில தெலுங்கு
படங்களிலும் நடித்து இருக்கிறார்.


சின்மயி–ராகுல் ரவீந்திரன் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, மே 5–ந்தேதி சென்னையில் நடக்கிறது. மறுநாள் (மே 6–ந்தேதி), சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறது.
இவர்களின் திருமண பத்திரிகையில், ‘‘உறவினர்கள், நண்பர்கள் யாரும் பரிசு பொருட்கள் அல்லது பூச்செண்டுகள் கொண்டுவர வேண்டாம் என்றும், அந்த தொகையை லடாக்கில் உள்ள மலைசாதி மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கியிருக்கும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.