பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


எனக்கு சொந்தவீடு, சொத்து கிடையாது: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’மதவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கு நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். இந்த பேரில் கலைஞர் தலைமையிலான
கூட்டணி வெற்றி பெற வேண்டும்.


பாஜக முரண்பாடான கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக, முஸ்லீம், பிற்பட்டுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்காமல் தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணிதான் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளது. தொகுதி முழுவதும் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் மக்கள் குரல் ஒலிக்க, மக்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். எனக்கு சொந்தவீடு, சொத்து கிடையாது. அரசு வேலையை துறந்துவிட்டு 30 ஆண்டுகளாக அப்பழுக்கற்ற முறையில் மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன். இருக்கும் இடத்தில் திருமாவளவன் என்றும் விசுவாசமாக இருப்பான். மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், பெண்களுக்காக இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தவும் போராடுவேன்’’ என தெரிவித்தார்.