பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2014

அம்பாந்தோட்டையில் 800 பயணிகளுடன் ஜெர்மன் கப்பல்

800 சுற்றுலா பயணிகளுடன் கூடிய ஜெர்மனி நாட்டு சுற்றுலா கப்பலொன்று நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் மேற்படி
கப் பல் நேற்று இரவு இலங்கையிலிருந்து புறப்பட ஏற்பாடாகியது. ஹம்பாந் தோட்டையை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் ஹம்பாந்தோட்டை அபிவி ருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மத்தள விமான நிலையம், மிரிஜ்ஜவில் தாவரவியல் பூங்கா அடங்கலான பல இடங்களை பார்வையிட்டனர்.
கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டு கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது தெரிந்ததே.