பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2014

க.பொ.த. சாதாரண தர பரீட்சை:

சிறந்த பெறுபேறுகள் பட்டியலில் யாழ் வேம்படி மகளிர் 5வது இடம்

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுக ளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி
இடம்பெற்றுள்ளது. இக்கல்லூரி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 246 மாணவியர்களில் பெரு ம்பாலானவர்கள் அனைத்துப் பாடங் களிலும் சித்தியடைந்துள்ளனர்.
கொழும்பு 8 தேவி பாலிகா மகா வித்தியாலயம் கூடுதலான பெறுபேறு களைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 245 மாணவியர் களில் 124 மாணவியர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றிருப்பதுடன், 83 வீதமானவர்கள் 8 ‘ஏ’ ற்கும் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் எந்தவொரு மாணவியும் எந்தவொரு பரீட்சையிலும் தோற்றத் தவறவில்லை யென கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டாவது இடத்தில் கம்பஹா ரத்னாவளி பாலிகா மகா வித்தியால யமும், மூன்றாவது இடத்தில் மாத் தளை அரச விஞ்ஞானக் கல்லூரியும், நான்காவது இடத்தில் கொழும்பு விசாகா மகளிர் மகா வித்தி யாலயமும் காணப்படு கின்றன.
சிறந்த பெறுபேறுகளை வழங்கிய பாட சாலைகளின் பட்டியலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 24வது இடத்தில் காணப்படுகிறது. மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் பாடசாலை 44வது இடத்திலும் காணப்படுகிறது.