பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014

நாம் பயங்கரவாத அமைப்பு இல்லை: பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி 
பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
இந்த செயல் நகைப்புக்குரியது, தமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு முன்னர் தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யப்படாதததால் ஜனநாயகப் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
 
பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும் அமைப்பு . சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில் விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்