பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் ஆரம்பம் 
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
 
சுகாதார அமைச்சு, சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றுடன் இணைந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இந்த உளநல மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்க இருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு. குணதாஸ தெரிவித்தார்.
 
அடுத்த மாதம் முதல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அவர்களை சாதாரண நிலைக்கு திருப்ப நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
 
சில குடும்பத்தினர் தமது உறவினர்கள் திரும்பி வருவர் என நம்புவதாகவும் ஆனால், காணாமல் போனது தொடர்பான சில முறைப்பாடுகள் தொடர்பில் போதிய சாட்சியங்களோ ஆதாரங்களோ கிடையாது என்றும் குறிப்பிட்டார். அதனால், அது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.