பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


தள்ளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
 .தளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
 காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடனில் ரூ.30 லட்சம் பலனடைந்தவர் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா
. என்று கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி பேசினார்.


எச். ராஜா பலனடைந்தார் :
 சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு கீரமங்கலம் பகுதியில் வாக்குகள் சேகரிக்க பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுச்சாமி பேசினார். அவர் பேசியதாவது.. யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற கனவில் மிதக்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சொன்னால் பா.ஜ.க பின்னால் போய்விடும். காங்கிரஸ் அரசாங்கம் தள்ளுபடி செய்த விவசாய கடனில் இப்போது கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடும் பபா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா 15 ஏக்கர் நிலத்தை பல வங்கிகளில் காட்டி ரூ. 30 லட்சம் கடன் வாங்கி தள்ளுபடி செய்யப்பட்டது. அதிகம் பலனடைந்தவர் என்ற பட்டியலில் எச்.ராஜாவும் இருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்காக அதிகமான நிதி ஒதுக்கியது காங்கிரஸ் அரசாங்கம் தான். ஜெயலலிதா ஆட்சி பொருப்புக்கு வந்தவுடன் டெல்லிக்கு சென்று திரும்பும் போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தமிழகத்திற்கு நான் கேட்டதை விட அதிக நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால் மத்திய அரசுக்கு நன்றி சொல்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதே ஜெயலலிதா மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை என்று சொல்லி வருகிறார்.
இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்லும் போது. ராகுல் தலைமையில் ஆட்சி ஏற்று அமைச்சர் பதவியில் அமருவார். அதனால் கார்த்திக் சிதம்பரத்தை வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசினார்.
நடிகர் பாண்டு :
 அதே திறந்த வேனில் நின்று திரைப்பட நடிகர் பாண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவரங்குளம் வட்டாரத் தலைவர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.