பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வேண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகிறார்கள்.

புதிதாக அமைக்கப்படும் கிணறுகளின் தண்ணீர் இல்லாமல் போகும் நிலையில், அந்த கிணறுகளை முறையாக மூடி வைக்காமல் அப்படியே போட்டுவிடுகின்ற்றனர்.  இப்படி மூடாமல் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளில், குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன.
இவற்றை தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசு, ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு தொடர்பான சுற்றிக்கையை அனுப்பி உள்ளது. அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில், ஆழ்குழாய் கிணறு அமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் ஹனீஸ் சாப்ரா தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ஆழ்குழாய் கிணறு அமைக்கும்போது, அந்த இடத்தின் உரிமையாளர், சம்மந்தப்பட்ட நகராட்சி அல்லது ஊராட்சி தலைவர், பொது சுகாதாரத்துறை அலுவலரிடம், 15 நாட்களுக்கு முன்பாக ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.